• May 30 2026

தனது இரண்டாவது குழந்தையின் பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய எமி..வைரல் கிளிக்ஸ்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

மதராசபட்டினம், தெறி, 2.0, தங்கமகன் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்த நடிகை எமி ஜாக்சன், தற்போது உடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியான தோற்றத்தில் காணப்படுகிறார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்னரும் சினிமாவில் பிஸியாக உள்ளார்.

சமீபத்தில் வெளியான அவரது புதிய புகைப்படங்களில், மிகவும் ஒல்லியாக மாறிய தோற்றம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மதராசபட்டினம் படத்தில் நடித்த போது அவருடைய இயற்கை அழகே நன்றாக இருந்தது என ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

முன்னதாக ஜார்ஜ் என்பவருடன் உறவில் இருந்து ஒரு மகனை பெற்ற அவர், பின்னர் பிரிந்தார். அதனைத் தொடர்ந்து பிரிட்டிஷ் நடிகர் எட் வெஸ்ட்விக்குடன் திருமணம் செய்து கொண்டு, இரண்டாவது குழந்தைக்கும் தாயானார்.


இந்த நிலையில்,  எமி ஜாக்சன் தனது இரண்டாவது குழந்தையின் முதல் பிறந்த நாளை வெகுவாக கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியீட்டு உள்ளார்.


Advertisement

Advertisement