• Jan 18 2025

பிக்பாஸ் வீட்டில் மல்லாக்க விழுந்த மாயா! வயிறுவலிக்க சிரித்த ஹவுஸ்மேட்ஸ்! வீடியோ இதோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதில், இது வரை இல்லாதது போல புதிய பொழுதுபோக்கு ஒன்றை ரசிகர்களுக்கு காட்டியுள்ளனர் பிக் பாஸ் டீம். 

பிக் பாஸ் சீசன் 7 இல் கலந்து கொண்ட போட்டியாளர்களுள் பெரிதும் சர்ச்சைக்குரிய போட்டியாளராக காணப்படுபவர் மாயா தான். இவர் தொடர்பில் அண்மையில் பாடகி சுசித்ரா பெரிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார். அது நாளடைவில் பூகம்பமாக மாறியது.

அதே போல, பிக் பாஸ் வீட்டில் அவர் பூர்ணிமாவுடன் அதிகமாக நேரம் செலவழிப்பதும், அடிக்கடி விதி மீறல் செய்யும் வகையில் மைக்கை கழட்டி வைத்துவிட்டு பேசுவதுமாக தொடர்கின்றது.


எனினும், அவருக்கு என்று ஒரு தனி ரசிகர் வட்டாரமே உண்டு எனலாம். மாயா பிக் பாஸ் வருவதற்கு முன்பே நடிப்புத்துறையில் ஒரு கலக்கு கலக்கி விட்டு தான் வந்துள்ளார்.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் மாயா வழுக்கி விழுந்துள்ளார். தற்போது குறித்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வச்சு செய்து வருகின்றனர். பிக் பாஸ் வீட்டில் ஜோவிகா தான் அடிக்கடி வழுக்கு விழுவார். இம்முறை மாயா விழுந்தது பலருக்கு வேடிக்கையாக இருந்துள்ளது.

அதன்படி, ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் விஷ்ணு மற்றும் பூர்ணிமாவிடம் பேசிக்கொண்டிருந்த மாயா, தான் எப்படி ஓடுகிறேன்னு பாருங்க என சொல்லி கார்டன் ஏரியாவில் வேகமாக ஓடினார். மழைபெய்து அங்குள்ள வழித்தடத்தில் தண்ணீர் தேங்கி இருந்ததை கவனிக்காமல் அதில் மாயா ஓடும் போது மட்ட மல்லாக்க விழுந்துள்ளார். அவர் விழுந்ததை பார்த்ததும் அங்கிருந்த ஜோவிகா, ரவீனா, மணி, பூர்ணிமா ஆகியோர் விழுந்து விழுந்து சிரித்தனர்.

இதை தொடர்ந்து, என்ன விஷ பாட்டில் உடைஞ்சிட்டா என மாயாவை பார்த்து பூர்ணிமா கேட்டு கிண்டல் அடிக்கிறார். தற்போது குறித்த வீடியோ வைரலாகி வருகின்றது.



 

Advertisement

Advertisement