• Aug 23 2025

"MAY EYE COME IN..? " நடிகர் ஸ்ரீ பதிவால் அதிர்ச்சி..!

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்த நடிகர் ஸ்ரீ சமீபகாலமாக மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது. மேலும் இவர் திருநங்கையாக மாறி இருப்பதாகவும் பலர் கூறி இருந்தனர். நண்பர்கள் குடும்பத்தவர்கள் என பலரும் தேடி வந்தனர். இதைவிட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இவரை மீட்டதாகவும் தகவல் வெளியாகியது.


இந்த நிலையில் தற்போது 'MAY EYE COME IN? என்ற நாவலை எழுதியிருப்பதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். மேலும் அதில், தனது முதல் ஆங்கில நாவலை உலகிற்குப் பகிர்வதில் மிகவும் மகிழ்ச்சி என்றும், அதனை ஆன்லைனில் பெறுவதற்கான லிங்கங்களையும் பகிர்ந்துள்ளார். மேலும் இவர் தனது தற்போதைய புகைப்படம் ஒன்றினையும் பகிர்ந்துள்ளார்.


இவரது இந்த பதிவிற்கு "உன்னைத் தேடி இருந்தேன்","குணமடைந்து விட்டார் இனி ரகளதான்" போன்ற கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement