தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் மாரி செல்வராஜ். தனது முதல் படத்திலேயே மாபெரும் வெற்றி கண்ட இவர், தொடர்ந்து கர்ணன், மாமனிதன் போன்ற இரண்டு மாபெரும் ஹிட் படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
தற்போது இவருடைய இயக்கத்தில் நான்காவதாக ரிலீசாகி உள்ள படம் தான் வாழை. இந்தப் படம் அவருடைய வாழ்க்கையில் நடைபெற்ற உண்மையான சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
வாழைத்திரைப்படத்தில் மாரி செல்வராஜின் மனைவி திவ்யா தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இதில் நிகிலா விமல், கலையரசன் ஆகியோரும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள். மேலும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
சூரியின் நடிப்பில் வெளியான கொட்டுக்காளி திரைப்படத்துடன் வெளியான வாழை திரைப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில், தற்போது இதுவரையிலான மொத்த வசூல் விபரம் பற்றி தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி முதல் நாளிலேயே 1.3 கோடிகளை வசூலித்த வாழை திரைப்படம், இரண்டாவது நாளில் 2.5 கோடிகளை வசூலித்துள்ளது.
இதனால் இரண்டு நாட்களின் முடிவில் மொத்தமாக 3.8 கோடிகளை வசூலித்துள்ளதாக கூறப்படுகின்றது. இனிவரும் நாட்கள் விடுமுறை தினம் என்பதால் வாழைப்படத்தின் வசூல் வேட்டை தொடரும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது .
Listen News!