• Sep 20 2024

வசூலில் அடிவாங்கிய ‘இந்தியன் 2’.. ‘தக்லைஃப்’ படத்தில் சுதாரித்து அதிரடி முடிவெடுத்த மணிரத்னம்...

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான ’இந்தியன் 2’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும் ’விக்ரம்’ போலவே வசூலில் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்த படம் வசூல் மந்தமாக இருப்பதை எடுத்து ’இந்தியன் 2’படக்குழுவினர் மட்டுமின்றி மணிரத்னம் அவர்களுக்கும் தற்போது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.



இதையடுத்து அவர் தனது ‘தக்லைஃப்’ படத்தில் சில மாற்றங்களை செய்துள்ளதாக தெரிகிறது. ஆரம்பத்தில் ‘தக்லைஃப்’ படத்தை மூன்று மணி நேரத்திற்கு மேலாக எடுக்க தான் மணிரத்னம் முடிவு செய்திருந்ததாகவும் ஆனால் இப்போது அவர் 2:30 மணி  நேரத்தில் படத்தை முடித்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல் கமல்ஹாசன் காட்சிகள் குறைவாக இருக்கும் வகையில் சிம்பு காட்சிகளை அதிகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேவையில்லாத காமெடி காட்சிகள் பாடல் காட்சிகள் ஆகியவற்றை கட் செய்ய மணிரத்னம் முடிவு செய்து இருப்பதாகவும் இந்த காலை இளைஞர்களுக்கு பிடிக்கும் வகையில் சில மாற்றங்கள் திரைக்கதையில் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement