• Jan 18 2025

தனுஷ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.. ‘ராயன்’ படத்தின் சூப்பர் அப்டேட் வெளியிட்ட சன் பிக்சர்ஸ்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

தனுஷ் நடித்த 50வது திரைப்படமான  ’ராயன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் 26 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் விளம்பர பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக இந்த படத்தின் சிங்கிள் லிரிக்ஸ் பாடல் வீடியோக்கள் வெளியாகி வருகின்றன என்பதும் சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்தது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் ’ராயன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளதை அடுத்து தனுஷ் ரசிகர்கள் உற்சாகம் ஆகியுள்ளனர்.

ஜூலை 16ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் ’ராயன்’ டிரைலர் வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்த படம் மிரட்டலாக இருக்கிறது என்று படக்குழுவினர் தெரிவித்த நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லரை தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ், எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா ஜிகே படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.  


Advertisement

Advertisement