தமிழ் சினிமாவில் இந்தியன் 2 படத்திற்கு போட்டியாக பார்த்திபன் தயாரித்து அவர் நடிப்பில் டீன்ஸ் படமும் வெளியானது. இந்தியன் 2 படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வரும் நிலையில், பார்த்திபன் படத்தை ரசிகர்கள் பாராட்ட ஆரம்பித்து விட்டார்கள்.
கமலஹாசன் நடித்த அபூர்வ சகோதரர்கள் படத்துடன் புதிய பாதை படத்தை போட்டிக்கு வெளியிட்டு இருந்தார் பார்த்திபன். தற்போது 30 வருடங்கள் கழித்து இந்தியன் 2 படத்துடன் மோதியுள்ளார்.
குறைவான பட்ஜெட்டில் புதிய முயற்சியை எடுத்துள்ள பார்த்திபன் அதில் சுமார் 13 சிறுவர்களை வைத்து மிரட்டி இருந்தார். இதை பார்ப்பவர்களுக்கு திகில் நிறைந்த சுவாரஸ்ய படமாக அமைந்துள்ளது.
இந்த நிலையில், தற்போது பார்த்திபன் தனது எக்ஸ் தள பக்கத்தில், டீன்ஸ் படத்திற்கு உரிய மரியாதை கிடைக்க வில்லை என்றால் சினிமாவை விட்டு விலகி இருப்பேன் என்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதன்படி அவர் வெளியிட்டுள்ள பதிவில், சத்தியமா சொல்றேன் TEENZ -க்கு உரிய மரியாதை குழந்தைகள் மற்றும் குடும்பங்களிடம் இருந்து கிடைக்கலைன்னா நான் மிகவும் நேசித்த உயிராய் சுவாசித்த சினிமாவை விட்டு விலகி கண்காணா இடத்துக்கு மறைஞ்சே போயிட முடிவெடுத்தேன். இப்ப நீங்க எல்லாரும் ஒரு முகமா குடுக்குற பாராட்டுல நான் 'ஒ'ன்னு சந்தோஷத்தில அழுவுறது உங்களுக்கு கேக்க வாய்ப்பே இல்லே.
இது போதாது இன்னும் ஆதரவு தந்து பலரும் பாக்க உதவி செஞ்சி என்னை சந்தோஷத்தில சாகடிங்க. அடுத்த தலைமுறை ரசிக்கும் படியும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக ஒரு science fiction & fantasy thought ல் எடுக்கப்பட்ட இப்படம் பள்ளிகளும் கல்லூரிகளும் இல்லங்களும் கொண்டாட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
Listen News!