• Jan 18 2025

அடிக்கடி பச்சோந்தி போல் மாறுகிறார்.. சூர்யாவை வறுத்தெடுத்த பிரபல பத்திரிகையாளர்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யா நேரத்திற்கு ஏற்ற மாதிரி பச்சோந்தியாக மாறுகிறார் என்று பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன் கடுமையாக விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த அதிமுக காலத்தில் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவர்களுக்காக ஆதரவாக சூர்யா பொங்கினார் என்றும் ஆனால் அதே நேரத்தில் திமுக ஆட்சியின் போது நீட் தேர்வு தோல்வி காரணமாக தற்கொலை செய்த மாணவர்களை வேறு மாதிரியாக சூர்யா பேசி வருகிறார் என்றும் அவரைப் பொருத்தவரை அதிமுக ஆட்சியில் பொங்க வேண்டும், திமுக ஆட்சியில் அடக்கி வாசிக்க வேண்டும் என்பதுதான் கொள்கை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் அதே போல் ஹிந்திக்கு எதிராக குரல் கொடுத்து வந்த சூர்யா தற்போது மும்பையில் செட்டில் ஆனவுடன் ஹிந்திக்கு எதிரான கருத்துக்களை கூறுவதில்லை என்றும் குறிப்பாக ’புறநானூறு’ படத்தில் நடிக்காமல் போனதற்கு அதுதான் காரணம் என்று பத்திரிக்கையாளர் அந்தணன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நேரத்திற்கு ஏற்ற மாதிரி அவ்வப்போது சூர்யா தன்னுடைய கருத்துக்களை மாற்றிக் கொள்வதால் தான் அவரது நன்பகத்தன்மை கேள்விக்குறியாக இருக்கிறது என்றும் அவ்வப்போது சூர்யா பச்சோந்தியாக மாறி விடுகிறார் என  பத்திரிகையாளர் அந்தணன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement