• Jun 23 2024

டிரைவர் வேலைக்கு கிளம்பும் மகேஷ்.. கொளுத்திப் போட்ட மித்ரா! ஆனந்தி கொடுத்த வார்னிங்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்கப் பெண்ணே சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில் ஆனந்தியின் தோழிகள் மித்ராவின் அல்லக்கைகள் மீது தண்ணீரை எடுத்து ஊற்றி விட இரண்டு குழுவிற்கும்  இடையே வாக்குவாதம் ஏற்படுகின்றது. இதனால் தண்ணீர் தானே பட்டது அதுக்கு ஏன் வாய்க்கு வந்ததெல்லாம் பேசுறீங்க என்று கோகிலா கேட்கின்றார்.

அதற்கு டயானா உன்கிட்ட எல்லாம் பேசனும் என்று எங்களுக்கு அவசியமில்லை என்று சொல்ல, அங்கிருந்து ஆனந்தி என் அக்கா கிட்ட மரியாதை இல்லாம பேசாதீங்க அப்புறம் அம்புட்டு தான் என்று வார்னிங் கொடுக்கின்றார்.


மறுபக்கம் மகேஷ் வெளியில் கிளம்ப தயாராகிக் கொண்டிருக்க மகேஷின் அம்மாவிடம் சென்று மித்ரா தணிகாசாலம் குரூப் ஆஃப் கம்பெனியோட எம்பி அதாவது உங்க பையன் ஆனந்தி குடும்பத்துக்கு டிரைவர் வேலை பார்க்க கிளம்பிட்டு இருக்காரு என்று கொளுத்திப் போடுகிறார்.

இன்னொரு பக்கம் ஆனந்தி ஹாஸ்டல் வார்டனிடம் மன்னிப்பு கேட்கின்றார். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.

Advertisement

Advertisement