• Oct 06 2024

அண்டப்புளுகாவே இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா? மகாராஜாவை அட்டாக் பண்ணிய ப்ளூ சட்டை

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் சுந்தர். சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 மற்றும் சூரியன் நடிப்பில் வெளியான கருடன், சமீபத்தில் வெளியான விஜய் சேதுபதியின் ஐம்பதாவது பாடமான மகாராஜா திரைப்படம் ஆகியவையே 100 கோடி வரை வசூலித்து இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பிறமொழி படங்கள் வசூலில் வேட்டையாடி வர தமிழ் சினிமா மட்டும் பின் தங்கிய நிலையில் காணப்பட்டது. 

அதனை தூக்கி நிறுத்தும் வகையில் அரண்மனை 4, கருடன் மற்றும் மகாராஜா திரைப்படங்கள் 100 கோடி ரூபாய் வரை வசூலித்திருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில், பிரபல சினிமா விமர்சகரும் யூடியூப் பிரபலமான ப்ளூ சட்டை மாறன் தற்போது விஜய் சேதுபதியை சீண்டும் நோக்கில் அவருடைய மகாராஜா படத்தை கலாய்த்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


அதாவது ஆரம்பத்தில் விஜய் ஆண்டனியின் படங்களை கலாய்த்து தள்ளி வந்த ப்ளூ சட்டை மாறன், தற்போது விஜய் சேதுபதியின் படத்தை பார்த்து,  'மனசாட்சியோடு உருட்டுங்கடா..' அரண்மனை 4, மகாராஜா ஆகிய இரண்டு படமுமே 100 கோடி ரூபாய் வரை வசூலிக்கவில்லை என ஏற்கனவே பதிவிட்டிருந்தார்.

தற்போது மீண்டும் விஜய் சேதுபதியின் மகாராஜா படம் 25 நாட்களில் 100 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்ட நிலையில், குறித்த பதிவை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்த ப்ளூ சட்டை மாறன் 'அண்டப்புளுகாவே இருந்தாலும் ஒரு நியாய தர்மம் வேண்டாமா? என குறிப்பிட்டுள்ளார்.



Advertisement

Advertisement