• Jan 19 2025

ஜீ தமிழ் டிவியில் கலக்கும் இலங்கையின் இளம் நடிகை! நடுவர்களையே கண்கலங்க வைத்த அபார நடிப்பு!

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்ச்சியில் முதல் முறையாக மகா நடிகர்களுக்கான தேர்வு நிகழ்ச்சி ஒன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு இடங்களிலிருந்தும் நடிகைகள் வருகை தந்து தங்களது திறமைகளை காட்டி வருகின்றனர். 


அந்த ஷோவில் இலங்கையை சேர்ந்த கவிப்ரியா என்ற நடிகை அதில் பங்குபற்றியுள்ளார். இவர் தனது மீடியா பயணத்தை இலங்கையில் பிரபல தொலைக்காட்ச்சி ஒன்றில் தொகுப்பாளராக தொடங்கி தொடர்ந்து மாடலிங், ஆல்பம் சோங், ஷாட் பிலிம் என தன்னை வளர்த்துக்கொண்ட இவர் தற்போது ஒரு சில படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்தும் வருகிறார். தற்போது இவரின் நடிப்பில் ஆரகன் திரைப்படம் வெளிவராயிருக்கிறது. 


இந்நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்ச்சியில் நடைபெறும் மகா நடிகை போட்டியில் பங்கு பற்றியுள்ளார். அதில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொல்கத்தா மருத்துவரின் நிலையை தத்ரூபமாக நடித்து காட்டியதோடு. அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளார். அத்தோடு அந்த மகாநடிகை நிகழ்ச்சியில் தேர்வும் ஆகியுள்ளார். 

Advertisement

Advertisement