• Jan 19 2025

இன்று மாலை வெளியாகிறது ராஜுவின் "பன் பட்டர் ஜாம்" ஃபர்ஸ்ட் லுக் !

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் (தமிழ்) சீசன் 5 இன் வெற்றியாளராக அறியப்படும் ராஜு தொலைக்காட்சி நாடகங்கள்மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளராக கலைப்பயணத்தை தொடங்கினார். சமீபத்தில் பெருந்திரையில் துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார் ராஜு.

Raju Jeyamohan to headline Bun Butter Jam

இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு வெளியான ‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தினை இயக்கிய ராகவ் மிர்தாத்தின் அடுத்த படத்தில் ராஜு கதாநாயகனாக நடிப்பதாக அறிவிப்புகள் வெளியாகி ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தை கொடுத்தது.

Raju Jeyamohan on X: "Naaliki evening 4 ...

"பன் பட்டர் ஜாம்" என தலைப்பிடப்பட்டிருக்கும் ராஜுவின் இத் திரைப்படத்தில் ராஜுவுடன்,முன்னணி நடிகர்களான ஆதி பிரசாத் மற்றும் பவ்யா த்ரிகா ஆகியோரும் நடித்துள்ளனர்.இந்நிலையில் "பன் பட்டர் ஜாம்" படத்தின் முக்கிய அப்டேட்டான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 4 மணியளவில் வெளியிடவிருப்பதாக உத்தியோகப்பூர்வ செய்திகள் வெளியாகியுள்ளன.


Advertisement

Advertisement