• Oct 13 2024

அப்ப என்ன எதுக்கு கூப்டீங்க! ஹிந்தி தெரியாது போய்யா! டென்ஷன் ஆன நடிகை மீனா!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

முன்னணி ஹீரோயினாக 80கள் மற்றும் 90களில் கலக்கி வந்தவர் நடிகை மீனா. இவர் பல முன்னணி பிரபலங்களுடன் நடித்துள்ளார். தற்போது குணச்சித்திர வேடங்கள், டிவி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் தான் கலந்துகொண்டு வருகிறார்.


சமீபத்தில் நடந்த IIFA விருது விழாவுக்கு மீனாவை அழைத்து இருக்கின்றனர். அந்த விழாவுக்கு இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்டப் பல மொழி நட்சத்திரங்கள் வருகை தந்திருந்தனர். அங்கு வந்தவர்களிடம் செய்தியாளர்கள் பேட்டிகள் எடுத்த வண்ணம் இருக்க நடிகை மீனா சென்று அங்கிருந்த மீடியா மைக்குகள் முன்பு பேச ஆரம்பிக்கும் போது அவரை தமிழில் பேச வேண்டாம் ஹிந்தியில் பேசுங்க என கூறுகின்றனர்.


அப்போது திடுக்கிட்ட மீனா "ஹிந்தி என்றால் என்னை எதற்கு கூப்டீங்க? என்று கேட்டார் பின்னர் தென்னிந்தியா நடிகர்கள் மட்டும் வருகிறார்கள் என நினைத்தேன். தென்னிந்திய படங்கள் சிறப்பாக இருக்கின்றன. தென்னிந்தியராக இருப்பதில் பெருமை படுகிறேன்" என ஆங்கிலத்தில் பேசிவிட்டு சென்றுள்ளார் நடிகை மீனா. அந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது. 

Advertisement