• Jan 18 2025

உடல்நலக்குறைவால் கூலி படத்திற்கு ஏதேனும் சிக்கல் எழுமா! தலைவரின் தற்போதைய நிலை என்ன?

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

கூலி , வேட்டையன் என ஷூட்டிங்கில் பிசியாக இருந்து வந்த ரஜினிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. எனவே மருத்துவமனையில் சிகிச்சைக்காக ரஜினி அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தி கேட்ட ரசிகர்கள், ஒட்டுமொத்த திரைபிரபலங்கள் அனைவரும் உச்சகட்ட பதட்டத்திற்கு ஆளாகினர். 


ஆனால் பதட்டப்பட ஒன்றுமில்லை என்றும், ரஜினி தற்போது நலமுடன் தான் உள்ளார், இன்னும் இரண்டு நாட்களில் ரஜினி வீட்டிற்கு திரும்புவார் என மருத்துவமனையில் இருந்து அறிக்கை வெளியாகியுள்ளது. இது ரசிகர்களையும் திரைவட்டாரங்களை சார்ந்தவர்களையும் நிம்மதியடைய செய்துள்ளது.படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாக இருக்கின்றது. எனவே ரஜினி சற்று ஓய்வில் இருப்பதால் வேட்டையன் படத்திற்கு எந்த பாதிப்பும் கிடையாது. அப்படத்தின் வேலைகள் எல்லாம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகவுள்ளது.


ஆனால் ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருப்பதால் கூலி படத்திற்கு ஏதேனும் சிக்கல் எழுமா ? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகின்றது. ஆனால் கூலி படப்பிடிப்பை திட்டமிட்டபடி நடத்தி வருகிறாராம் லோகேஷ். ரஜினி இல்லாத காட்சியை தற்போது லோகேஷ் படமாக்கி வருகிறாராம். மேலும் அக்டோபர் 17 ஆம் தேதி கூலி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருக்கின்றதாம். அந்த படப்பிடிப்பில் ரஜினி கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வருகின்றன. 

Advertisement

Advertisement