• Jan 19 2025

அரங்கையே அதிரவைத்த ஜோக்கர் 2! இருக்கை நுனியில் இருக்கும் சம்பவம்! Joker: Folie A Deux விமர்சனம்!

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

ஒட்டுமொத்த ரசிகர்களையும் அலறவிட்ட திரைப்படம் என்றால் அது ஜோக்கின் பீனிக்ஸ் நடிப்பில் வெளியாகியுள்ள Joker திரைப்படம்தான் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் Folie a Deux திரை படத்தின் விமர்சனம் குறித்து பார்ப்போம்.


2019ஆம் ஆண்டில் வெளியான Joker படத்தின் தொடர்ச்சியாக இந்த Joker: Folie a Deux படம் வெளியாகியுள்ளது. கடந்த பாகத்தில் 5 பேரை கொலை செய்த குற்றத்திற்காக நீதிமன்ற விசாரணையில் இருக்கும் ஆர்த்தர், ஆர்க்கம் ஸ்டேட் மருத்துவமனையில் ஹர்லீன் லீ எனும் லேடி காகாவை சந்திக்கிறார்.


இருவருக்குமான காட்சிகள் ரொமான்டிக் சைக்கோ ட்ராமா காட்சிகளாக நகர்கின்றன. முழுக்க முழுக்க நீதிமன்ற விசாரணை கதைக்களத்திலேயே படத்தை கொண்டு சென்றுள்ளார் இயக்குநர் டோட் பிலிப்ஸ். அதன் காரணமாகவே திரைக்கதை மெதுவாக நகரும் உணர்வை நமக்கு தருகிறது.


எனினும் நடிப்பில் அனைவரும் மிரட்டியிருக்கிறார்கள். குறிப்பாக, ஜோக்கின் பீனிக்ஸ் ஜோக்கர் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். ஜோக்கர் பெரிய சம்பவங்களை செய்ய போகிறார் என்று எதிர்பார்த்து வரும் ரசிகர்களுக்கு இந்த கதைக்களம் ஏமாற்றத்தை தரலாம். தனக்காக ஆர்த்தர் வாதாடும் அந்த காட்சி சீட் நுனியில் உட்கார வைக்கிறது. 


லேடி காகா அசால்ட்டாக தீ வைக்கும் காட்சியிலும், ஆர்த்தரை வெறுக்கும் காட்சியிலும் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். தனது வக்கீலை ஆர்த்தர் நீக்கும் காட்சி நச். ஆனால், படத்தின் முடிவு எதிர்பாராத ஒன்று. மொத்தத்தில் முதல் பாகம் அளவிற்கு இல்லை என்றாலும், ஜோக்கின் பீனிக்ஸ் நடிப்பிற்காகவே ஒருமுறை இப்படத்தை ரசிக்கலாம்.

Advertisement

Advertisement