• Jan 19 2025

விஜயாவின் பாட்டை கேட்டு அலறிய நாய்கள்.. முத்துவின் போனை ஆட்டைய போட்ட லேடி கிரிமினல்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மீனா கொலு வைப்பதற்கு எல்லாத்தையும் தயாராகிக் கொண்டிருக்க, அந்த நேரத்தில் பார்வதி மற்றும் டான்ஸ் கிளாஸ் இருப்பவர்கள் வருகின்றார்கள். ஒவ்வொருவராக வேற மீனாவின் அம்மாவும் சீதாவும் வருகின்றார்கள். இதனால் விஜயாவின் முகம் மாற அண்ணாமலை அவர்களை உள்ளே கூப்பிடுகின்றார்.

அதன் பின்பு ரதியும் அந்தப் பையனும் ஒன்றாக வந்து விஜயாவிடம் ஆசிர்வாதம் வாங்குகின்றார்கள். மீனா இதை முத்திவிடம் சொல்ல, இவன் ஆளை சரி இல்லை என்று சொல்லுகின்றார். அதன்பின்பு  வித்யா ரோகினியிடம் அந்த பிஏவை என்ன பண்ணப் போறா என்று கேட்க, இன்றைக்குள்ள எப்படியாவது முத்துவின் போனை எடுக்க வேண்டும் என்று பிளான் போடுகின்றார்.

அதன்பின் மீனா, ஸ்ருதி, ரோகிணி அனைவரும் விளக்கேற்றி பூஜையை ஆரம்பிக்க, விஜயா தீபாரதனை காட்டிவிட்டு பாடுவதற்கு ஆரம்பிக்கின்றார். விஜயா பாடுவதை கேட்டு எல்லோரும் காதை பொத்திக் கொள்கின்றார்கள். மேலும் நாய்களும் அதிகமாக கத்துகிறது. இதனால் முத்து அம்மா பாடும் போது நாய் டிஸ்டர்ப் பண்ணலாமா? போய் விரட்டி வருகின்றேன் என்று சொல்லுகின்றார். அனைவரும் விஜயா பாட்டை கேட்டு மிரண்டு போயிருக்க அண்ணாமலை ஒன்ஸ்மோர் ஒன்ஸ்மோர் என கேட்க, விஜயா சந்தோஷமாக பாடுகின்றார். இதனால் எல்லாரும் அதிர்ச்சியடைகின்றார்கள்.


பிறகு ஸ்ருதியை பாட சொல்ல, அவர் தனக்கு டப்பிங் தான் வரும் என்கின்றார். ரோகிணியை பாட சொல்ல அவரும் தனக்கு வராது என்று சொல்ல, மீனா அம்மன் பாட்டை பாடுகின்றார். இதனால் எல்லாரும் மெய்மறந்து கேட்டு கைதட்டுகின்றார்கள். அந்த நேரத்தில் வித்யா முத்துவின் போனை எடுக்க முத்து பார்த்து விடுகிறார். மேலும் அதனை வாங்கி நானே வச்சிக்கிறேன் பரவால்ல என்கிட்ட பாக்கெட் இருக்கு என்று வித்யாவுக்கு பல்பு கொடுக்கின்றார்.

பங்க்ஷன் முடிந்ததும் இரவு மீனாவிற்கு முத்து காலை பிடித்து விடுகின்றார். மேலும் உடம்பெல்லாம் நோகுது தான் வெளியே  போயிட்டு  வருவதாக சொல்லவும், மீனா விடவில்லை. அவர் கொடுக்கப் போகின்றார் என்று மீனா தடுத்துள்ளார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement