• Apr 14 2026

யாருக்கும் தெரியாமல் திருச்சிக்கு கிளம்பிய முத்துவேல்! கதிர் கொடுத்த வாக்குறுதி...

shali / 1 day ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, கதிர் முத்துவேலுக்கு போன் எடுத்து நாளைக்கு காலையில திருச்சி ஹாஸ்பிடலுக்கு போய்ட்டு வந்திருவோம் என்கிறார். அதுக்கு முத்துவேல் தான் தனியாவே பார்த்துக்கிறேன் என்று சொல்லுறார். பின் கதிர் இல்ல பரவாயில்ல நானும் கூட வாறன் என்கிறார். அந்த நேரம் பார்த்து ராஜி அங்க வந்து நிற்க கதிர் உடனே கஸ்டமர் கூட கதைச்சிட்டு இருந்தன் என்று சொல்லுறார்.

மறுபக்கம் வடிவு முத்துவேலைப் பார்த்து இப்படி ரூமுக்குள்ளயே எதுக்கு இருக்கிறீங்க என்று கேட்கிறார். அதுக்கு முத்துவேல் ஒன்னுமில்ல சும்மா தான் இருக்கிறேன் என்று சொல்லுறார். அதனை அடுத்து மயில் மீனாவோட கால் கதைக்கும் போது சரவணன் கூட கதைச்சனான் என்று சொல்லுறார். மேலும், நான் அந்த வீட்டில இருக்கும் போது என்னவெல்லாம் செய்தனான் என்று சொல்லிப் பேசினார் என்று மீனா கிட்ட சொல்லுறார். 


அதைக் கேட்ட மீனா அவர் கோபப்படுறதிலயும் நியாயம் இருக்கு என்கிறார். அதனை அடுத்து கதிர் ஓட்டம் இருக்கு என்று சொல்லிட்டு திருச்சிக்கு கிளம்புறதைப் பார்த்த பாண்டியன் வேற யாரையும் டிரைவரா விடச் சொல்லுறார். அதைத் தொடர்ந்து மீனா கோவிலுக்கு போறேன் என்று சொல்ல, உடனே செந்தில் தானும் வாறன் என்கிறார்.

அதுக்கு மீனா நீங்க ஒன்னும் வரவேணாம் என்கிறார். அதைக் கேட்ட செந்தில் இவள் என்னமோ பண்ணுறாள் என்று யோசிக்கிறார். மறுபக்கம் முத்துவேல் திருச்சிக்கு கிளம்புறதைப் பார்த்த சக்திவேல் தானும் வாறன் என்று சொல்லுறார். அதுக்கு முத்துவேல் சமாளிச்சிட்டு அங்கிருந்து கிளம்புறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement