• Jan 18 2025

லைகா வெளிநாட்டு நிறுவனம்.. ஓடிவிடுவார்கள்.. நீதிமன்றத்தில் விஷால் மனு தாக்கல்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

லைகா வெளிநாட்டு நிறுவனம் என்பதால் இந்தியாவிலிருந்து ஓடிவிட வாய்ப்பு இருப்பதாகவும் அதற்குள் எனக்கு சேரவேண்டிய பணத்தை வாங்கி கொடுக்க வேண்டும் என்றும் நடிகர் விஷால் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விஷால் நடித்த ’சண்டக்கோழி 2’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையை லைகா நிறுவனம் கடந்த 2018 ஆம் ஆண்டு ரூ.23.21 கோடிக்கு வாங்கியது. ஆனால் அதற்கான 12 சதவீத ஜிஎஸ்டி தொகையை லைகா நிறுவனம் செலுத்தவில்லை என விஷால் புகார் கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஜிஎஸ்டி தொகை மற்றும் அபராத தொகையை வட்டியுடன் சேர்த்து 5 கோடியே 24 லட்சத்து 10 ஆயிரத்து 423 ரூபாய்க்கான உத்தரவாதத்தை லைகா நிறுவனம் செலுத்த உத்தரவிட வேண்டும் என்றும் லைகா நிறுவனம் வெளிநாட்டு நிறுவனம் என்பதால் எப்போது வேண்டுமானாலும் இந்தியாவை விட்டு ஓடிவிட வாய்ப்பிருப்பதால் விரைவில் வாங்கி தர  உத்தரவிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு குறித்து மத்தியஸ்த  பேச்சுவார்த்தைக்கு அனுமதிக்குமாறு லைகா நிறுவனம் மனு தாக்கல் செய்த நிலையில் அதற்கு நீதிமன்றமும் சம்மதம் தெரிவித்தது. இந்நிலையில் விஷால் வழக்கறிஞர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகி விஷால் மற்றும் லைகா நிறுவனம் இடையே சமரச தீர்வு மையம் மூலம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அதில் தீர்வு காண்பதாக உறுதி அளித்துள்ளதாகவும் எனவே இந்த வழக்கை முடித்து வைக்குமாறு கேட்டுக் கொண்டார். இதனை அடுத்து நீதிபதி இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தார்.

Advertisement

Advertisement