• Jan 18 2025

LOVE YOU மாயா... சோறுபோடுங்க அர்ச்சனா... கால் பண்ணுங்க விஷ்ணு... பூர்ணிமா வைரல் டுவிட்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிரபல நிகழ்ச்சியான  பிக் பாஸ் விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்தது . இந் நிலையில் மக்கள் வாக்கு மூலம் 3 சீசன்களுக்கு பின்னராக ஒரு பெண் வெற்றியை தழுவி கொண்ட பெருமை அர்ச்சனாவை சேர்ந்தது . 


சீசன் 7 போட்டியாளர்களாக பங்கு பற்றி மாயா, பூர்ணிமா, ஜோவிகா, விக்ரம், அக்ஷயா, நிக்சன், விஜய், விசித்ரா, அனன்யா ஆகியோர் புல்லிகேங்ன் என்ற பெயரில் பிக் பாஸ் வீட்டை ஆட்டி படைத்தனர். இந்நிலையில் மாயா, பூர்ணிமா நட்பு பெரும்பாலும் பேசப்பட்டது. ஏன் அவர்களினால்த்தான் பிக் பாஸ் அதிக TRP பெற்றது என்றே சொல்லவேண்டும். 


இதனையடுத்து அனைத்து சீசன்களிலும் விட இந்த முறை அதிக பணத்தொகையுடன் கூடிய பணப்பெட்டியை எடுத்த பெருமை பூர்ணிமாவையே சேரும். இந்நிலையில் பிக் பாஸ் விட்டு வந்த பிறகு பிக் பாஸ் தொடர்பான டுவிட்களை இடும் பூர்ணிமா தற்போது ஒரு வைரல் டுவிட்டை பதிவிட்டுள்ளார். 


அதில் இறுதிப் போட்டிக்கு வந்த ஐந்து பேருக்கும் வாழ்த்துக்கள். நான் முன்பே சொன்னது போல் வெற்றி பெறுவது அல்ல பிழைப்பது. சீசன் முழுவதும் நீங்கள் உயிர் பிழைத்தீர்கள். உங்கள் அனைவருக்கும் பெருமையாக இருக்கிறது. வெற்றியாளர் அர்ச்சனாவுக்கு சிறப்பு வாழ்த்துக்கள், நன்றாக விளையாடிய பெண், நானும் உங்களுடன் வீட்டிற்குள் செலவழித்த நேரம் மிகவும் பிடித்திருந்தது. நீங்க வீட்டுக்கு கூப்பிட்டு இருக்கீங்க கண்டிப்பா வருவேன், சோறு போடுங்க. அப்டியே அந்த ட்ரிப் முக்கியம் என்று அர்ச்சனாவுக்கு வாழ்த்தியுள்ளார்.


மேலும் நீங்கள் ஒரு வேடிக்கையான நபர், நிகழ்ச்சியில் உங்கள் இருப்பை நான் ரசித்தேன் மற்றும் வாழ்த்துக்கள் டா மணி என்று கூறியுள்ளார். மாயா நீ என் போராளி. என் உண்மையான வெற்றியாளர். சொல்ல வேண்டியதெலாம் கட்டி அணைத்த படி கண்ணீரில் சில நிமிதம் தனித்தேன். லவ் யூ சகோ என குறிப்பிட்டுள்ளார்.


தினேஷ் அன்பே குளிர்ந்த ஆன்மா.வீட்டிற்கு வெளியே ஆட்டமிழந்த தினேஷைக் காண காத்திருக்கிறேன். வாழ்த்துக்கள் எனவும்  விஷ்ணு  மிகவும் போட்டி மற்றும் உறுதியானவர். ஆல் தி வெரி பெஸ்ட். நான் சொன்னது போல் நான் ஒரு தொலைபேசி அழைப்பில் இருக்கிறேன் நண்பர்களே. டேய் தொடர்பில் இருங்கள் என பிக் பாஸ் போட்டியாளர்களின் இறுதி வரை வந்தவர்களை வாழ்த்தி பதிவிட்டுள்ளார்.   


Advertisement

Advertisement