• Dec 19 2025

லாஸ்லியாவின் கிளாமரான போட்டோஷூட்...! இன்ஸ்டாவில் வைரலாகும் போட்டோஸ்...!

Roshika / 3 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் லாஸ்லியா . அந்த நிகழ்ச்சியின் மூலமாக மிகுந்த வரவேற்பைப் பெற்ற இவர், தொடர்ந்து சில திரைப்படங்களிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தினார்  ‘பிரண்ட்ஷிப்’ மற்றும் ‘கூகிள் குட்டப்பா’ ஆகிய திரைப்படங்களில் நடித்த லாஸ்லியாவுக்கு, அந்த படங்களில் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.


அதற்கு பதிலாக, சமூக வலைத்தளங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. ஒவ்வொரு பதிவு செய்த போதும், லாஸ்லியாவின் ஸ்டைல், பேஷன் சென்ஸ் மற்றும் கவர்ச்சி தோற்றங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.


இந்நிலையில், சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கறுப்பு நிற T-shirt  மற்றும் நீல நிற ஜீன்ஸ் அணிந்து காட்சியளிக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களில் லாஸ்லியா மிகவும் அழகாகவும் ஸ்டைலிஷாகவும் தோன்றுகிறார். சிறந்த போஸ் மற்றும் இனிமையான சிரிப்புடன் காணப்படும் இந்த புகைப்படங்கள், வெறும் சில மணி நேரங்களில் ஆயிரக்கணக்கான லைக்குகளை பெற்றுள்ளன.


இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. ரசிகர்கள் “க்யூட் லுக்”, “ஸ்டைலிஷ் குயின்” என கமெண்ட்களில் புகழ்ந்து வருவதையும் காண முடிகிறது. லாஸ்லியாவின் இந்த புதிய லுக், மீண்டும் ஒருமுறை அவர் மீதான ரசிகர் மத்தியில் உள்ள பேராதரவை காட்டுகிறது.




Advertisement

Advertisement