• Sep 20 2024

அடுத்தடுத்து சூர்யாவின் மூன்று திரைப்படங்களை இயக்கும் லோகேஷ் கனகராஜ்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

மாநகரம், கைதி,மாஸ்டர் போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கும் படங்கள் அனைத்தும் பிளாக் பஸ்டர் வெற்றியடைந்து வருகிறது.

இவ்வாறுஇருக்கையில் இவர் இயக்கத்திலும் கமல் நடிப்பிலும் இன்று வெளியான திரைப்படம் தான் விக்ரம் திரைப்படம்.

இப்படம் ரசிகர்களிடத்தே நல்ல விமர்சனங்களை பெற்று வருகின்றது.இந்நிலையில் விக்ரம் படத்தில் சூர்யா கேமியோ கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியிருந்தார்.

இதனால் விக்ரம் படத்தின் அடுத்த பாகத்தில் சூர்யா தான் முக்கிய வில்லனாக இருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை என்று தான் கூற வேண்டும்.

இதற்கிடையே சூர்யா மற்றும் லோகேஷ் கூட்டணியில் உருவாகும் திரைப்படங்கள் குறித்த தகவல் தான் இணையத்தில் கசிந்து வருகின்றது.. அதன்படி விக்ரம் 3, இரும்புக் கை ,மாயாவி உள்ளிட்ட படங்களை தவிர மேலும் ஒரு திரைப்படம் இவர்கள் கூட்டணியில் உருவாகவுள்ளதாம்.

ஆம், மாநகரம் படத்தை தொடர்ந்து லோகேஷ் சூர்யாவிடம் வேறொரு கதையை சொல்லியிருந்தாராம், ஆனால் அப்படமும் உருவாகாமல் போய்விட்டது. இதனால் சூர்யா - லோகேஷ் கூட்டணியில் உருவாகும் மூன்று திரைப்படங்கள் வரும் காலங்களில் வரிசையாக உருவாகலாம் என குறிப்பிடப்படுகின்றது.

Advertisement

Advertisement