• Sep 20 2024

சூப்பர் ஸ்டார் படத்தை நிராகரித்த நடிகை சமந்தா-இது தான் காரணமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் டாப் இயக்குநராக விளங்குபவர் தான் இயக்குநர் அட்லீ, இவர் இயக்கத்தில் வெளியான அனைத்து திரைப்படங்களும் பிளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ளது.

ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார் .அதன்பின் விஜயுடனான பிளாக் பஸ்டர் கூட்டணியை தொடர்ந்து இயக்குநர் அட்லீ பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார்.

இவ்வாறு இருக்கையில் அட்லீ தற்போது நடிகர் ஷாருக் கானை வைத்து படம் இயக்கவுள்ளதாக பல நாட்களாக சொல்லப்பட்டு வந்தது.

ஆனால் இது குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தன, இதற்கிடையே இன்று அப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

மாஸ்ஸான கிலிம்ப்ஸ் காட்சியுடன் இப்படத்தின் டைட்டில் ஜவான் என அறிவித்துள்ளனர். எனினும் இதற்கிடையே அப்படத்தில் முதன்முதலில் கதாநாயகியாக நடிக்க நடிகை சமந்தாவிடம் தான் அணுகப்பட்டதாம்.

ஆனால் சில காரணங்களால் அப்படத்தை வாய்ப்பை மறுத்துவிட்டாராம். இதன்பிறகே அப்படத்தின் வாய்ப்பு நடிகை நயன்தாராவிற்கு கிடைத்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

Advertisement