• May 18 2024

தனுஷ் மூஞ்சி வேற டிசைன்ல கோண போகுது போல ... பழைய பார்முக்கு திரும்பிய ஐஸ்வர்யாவின் வெறித்தனம்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள்தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் இயக்குனராக வலம் வருகிறார்.

இதுவரையில் 3, வை ராஜா வை, லால் சலாம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். ஆனால் இந்த மூன்று படங்களுமே வசூல் ரீதியில் தோல்வியைத் தான் பெற்றன.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் தான் லால் சலாம். இந்த படத்தில் ரஜினிகாந்த் முக்கிய கேரக்டரில்  நடித்துள்ளார். ஆனாலும் அவர் நடித்த லால் சலாம் படம் தோல்வியை சந்தித்தது. இதற்கு ரசிகர்களை முட்டாளாக்கும் வகையில் பல்வேறு கருத்துக்களை சொல்லி இருந்தால் ஐஸ்வர்யா.

மறுபக்கம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனிப்பட்ட வாழ்க்கை  தற்போது விவாகரத்தில் போய் நிற்கின்றது. நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஐஸ்வர்யாவுக்கு இரு மகன்கள் உள்ளனர். ஆனால் தற்போது விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்கள்.


இந்த நிலையில், தற்போது ஐஸ்வர்யா ரஜினி பழைய பார்முக்கு திரும்பி இருப்பதாக தெரிகிறது. அதாவது படப்பிடிப்பில் பிஸியாக இருந்தால் தனது பிட்னஸில் கவனம் செலுத்தாமல் இருந்தார். ஆனால் தற்போது மீண்டும் தனது  பிட்னஸ் பயணத்தை தொடங்கியுள்ளார். 


அதன்படி வீட்டிலேயே ஒர்க் அவுட் செய்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா.

குறித்த வீடியோவில் அவர் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்வதை பார்த்த ரசிகர்கள், தனுஷுக்கு மூஞ்சில குத்து விடத்தான் இவ்வளவு வெறித்தனமா ஒர்க் அவுட் பண்ணுகிறார் போல என கலாய்த்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ,


Advertisement

Advertisement