• Jan 18 2025

4 எழுத்தில் செண்டிமெண்டில் சிக்கிய கவின்.. அடுத்த 2 பட டைட்டில்களும் 4 எழுத்துதான்..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

கவின் நடிப்பில் வெளியான கடைசி மூன்று படங்களின் டைட்டில் ஆங்கிலத்தில் நான்கு எழுத்தில் இருந்த நிலையில் அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் டைட்டிலும் ஆங்கிலத்தில் 4 எழுத்துக்களை கொண்டவையாக உள்ளது. இந்த நிலையில் கவின் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகி உள்ள நிலையில் அதுவும் சென்டிமென்ட் அடிப்படையில் ஆங்கிலத்தில் நான்கெழுத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் திரையுலகில் படிப்படியாக முன்னேறி வரும் கவின் ’லிப்ட்’ ’டாடா’ மற்றும் ’ஸ்டார்’ ஆகிய மூன்று படங்களில் நடித்துள்ளார் என்பதும் இந்த மூன்று படங்களிலுமே ஆங்கில டைட்டில் மற்றும் ஆங்கிலத்தில் 4 எழுத்துக்களை கொண்டவையாக உள்ளது.

மேலும் மேற்கண்ட மூன்று படங்களும் கவினுக்கு வெற்றி படங்களாக அமைந்த நிலையில் தற்போது அவர் நடன இயக்குனர் சதீஷ்குமார் இயக்கத்தில் உருவாக்கி வரும் ’கிஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுவும் ஆங்கில டைட்டில் மற்றும் ஆங்கிலத்தில் 4 எழுத்துக்களை கொண்ட டைட்டில் ஆக அமைந்துள்ளது.



இந்த நிலையில் தற்போது வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் அடிக்க இருக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்திற்கு ’மாஸ்க்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டிலும் ஆங்கிலத்தில்  4 எழுத்துக்கள கொண்டவையாக இருப்பதை பார்க்கும்போது கவினுக்கு 4 எழுத்து சென்டிமென்ட் தொற்றிக் கொண்டதா அல்லது தற்செயலாக இந்த டைட்டில்கள் அமைந்ததா என்று தெரியவில்லை.

மேலும் ’மாஸ்க்’ திரைப்படத்தில் கவின் உடன் ஆண்ட்ரியா நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் படக்குழுவினர்கள் இணைந்து எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Advertisement