விஜய் டிவியில் ரொம்பவே சூப்பராக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை .இந்த சீரியல்ல இந்த கரெக்டர் இல்லை என்றால் சீரியல் சூடு பிடிக்காது என்ற அளவுக்கு ஒரு கரெக்டர் மட்டும் பார்க்கவே கடுப்பாக இருக்கும் ,எப்படா இவங்க மாட்டிகிப்பாங்க என்றும் தோணும். அது வேற யாருமே கிடையாது சிறகடிக்க ஆசை ரோகினி தான்.

இவருடைய இயற்பெயர் நடிகை சல்மான் அருண். இவங்க வாழ்க்கை பயணம் , இவங்க எப்பிடி சீரியலுக்குள்ள வந்தாங்க என்றெல்லாம் பார்ப்போம் வாங்க , ரோகிணி என்று சொல்ல கூடிய கல்யாணி அவங்களுடைய நிஜ பெயர் சல்மான் அருண் .

இவங்க முஸ்லீம் மதத்தை சேர்ந்தவங்க . பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னையில தான் . இவர் 1993 டிசம்பர் 8 ம் திகதி பிறந்தாங்க . படிப்பு எல்லாமே சென்னையில தான்

அது மட்டும் கிடையாது இவர் சின்ன வயசிலேயே தான் அழகா இருக்கிறதால மொடலிங் பண்ணனும் , படம் நடிக்கனும் அப்பிடி என்கின்ற பல ஆசைகள் இருந்தது . இந்த ஆசைகள் எல்லாமே நிறைவேருவதற்காக அவங்க முதல் எடுத்த முடிவு தான் விளம்பரங்கள் , பல விளம்பரங்களில் நடித்தாலும் அது எல்லாமே பெரிய பெரிய பிராண்ட் கம்பனிகளுக்குரிய விளம்பரங்களே நடித்தார் .

இதனால இவருக்கு அரசாங்க விளம்பரத்தில நடிக்க வாய்ப்பு கிடைத்தது . இதில சிவகார்த்திகேயன் கூட நடிச்சி இருக்காங்க . அதனாலேயே இவருக்கு நிறைய தொடர்புகளுக்குரிய நம்பர்ஸ் கிடைத்தது . பல கான்டக்ட்ஸ் வைத்து இந்த துறையில நாங்க சாதிக்கனும் என்று நினைத்த இவங்க பல வாய்ப்புகளை தேட ஆரம்பித்தாங்க.

அப்பிடி தான் அவங்களுக்கு முதல் சீரியலாக அமைந்தது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "நம்ம வீட்டு பொண்ணு " இந்த சீரியல் தான் அவங்களுடைய முதல் சீரியல். இந்த சீரியல்ல கொஞ்ச நாட்கள் மட்டுமே நடித்த இவர் அதுக்கு அப்புறம் நடிக்கவில்லை. அதன் பின் பாரதி கண்ணம்மா 1 ல் நடிக்க வாய்ப்பு வந்தும் இவர் நடிக்கவில்லை .

அதன் பிறகு ராஜா ராணில டாக்டரா நடிக்க வாய்ப்பு கிடைத்தது . அதன் பின் ராஜா ராணில ஹீரோக்கு சமையலுக்கு ஏதிராக போட்டி போடுற மாதிரி கரெக்டர் கிடைத்தது . கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி கிடைத்த எல்லா கரெக்டரையும் பண்ணினாங்க . இதற்கு காரணம் இந்த துறையில இருந்த ஆர்வம் மட்டுமே

தொடர்ந்தும் zeetamil லில் "அமுதாவும் அனலட்சுமியும் "அப்பிடி என்கின்ற இந்த சீரியலில நடிக்க வாய்ப்பு கிடைத்தது . ஹீரோயினுக்கு அண்ணியாக இதன் மூலம் ஒரே திரையில வருவம் ரொம்ப ஆசையா இருந்தவங்க சல்மா .

ஆனால் இந்த ஆசையும் அவங்களுக்கு நிறைவேறவில்லை . சீரியல்ல வந்த ஆரம்பத்தில நல்ல சீன்ஸ் எல்லாம் இருந்தாலும் போக போக ஒரு கட்டத்தில் சீன்ஸ் இல்லாம போக ரொம்பவே மனம் உடைந்த இவர் அதன் பிறகு எதிலையும் நடிக்கவில்லை .

அப்புறமாக இவங்களுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு தான் சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் கதாநாயகனுக்கு அண்ணியாக இந்த சீரியலில் ஒரு சின்ன வில்லி ரோல் என்று கூட சொல்லாம் . ரொம்ப அழகா இந்த கதாபாத்திரத்தை நடித்து கொண்டு இருக்கிற இவர் இதன் மூலமாவே ரொம்ப பிரபலமானாங்க என்று எதிர்பார்க்கப்படுகிறது . சிறகடிக்க ஆசை சீரியல் ரோகிணி என்றாலே தெரியாதவங்க இல்லை அந்த அளவுக்கு பிரபலமானாங்க சல்மா அருண் .
Listen News!