• Jan 18 2025

ரஜனி-விஜய்யை விடுங்க அடுத்த அஜித் யாரு தெரியுமா... பயில்வான் ரங்கநாதன் பகீர் தகவல்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை வழங்கியுள்ளார் அதில் அடுத்த அஜித் இவர்த்தான் என்று ஒரு நடிகரை குறிப்பிட்டு பேசி இருந்தது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


நடிகர் கவின் கவின்தான் அடுத்த அஜித்குமார் என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்கள் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தவர் கவின். சிவகார்த்திகேயன் போல் வருவா என்று எதிர்பார்க்கப்பட்ட கவினுக்கு சினிமாவில் எந்த திருப்புமுனையும் ஏற்படாமல் இருந்தது. இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொண்டார். அங்கிருந்து வெளியே வந்த பிறகு லிஃப்ட் என்ற படத்தில் நடித்தார். விமர்சன ரீதியாக படம் ரசிக்கப்பட்டாலும் கவினுக்கு சொல்லிக்கொள்ளும்படி எந்த பெயரும் கிடைக்கவில்லை.


இந்தச் சூழலில் கணேஷ் கே பாபு இயக்கத்தில் டாடா என்ற படத்தில் நடித்தார் கவின். அவருக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து பிரபலமான அபர்ணா தாஸ் நடித்திருந்தார் . ஒரு கல்லூரி மாணவன் குழந்தைக்கு தந்தையாகும் உருவாகும் சூழலை ஒன்லைனாக வைத்துக்கொண்டு படம் உருவாகியிருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான இப்படம் அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக கவினின் நடிப்பு வெகுவாக ரசிக்கப்பட்டது. 

 உலக நாயகன் கமல் ஹாசன் கவினை நேரில் அழைத்து பாராட்டினார். அதோடு மட்டுமின்றி அடுத்ததாக ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் கவின் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் எனவும் கூறப்படுகிறது. ஆனால் அதில் எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. இதற்கிடையே பிக்பாஸில் கலந்துகொண்டபோது சக போட்டியாளரான லாஸ்லியாவை அவர் காதலித்ததாக கூறப்பட்டது. ஆனால் அதுகுறித்து இரண்டு பேரும் மௌனமே காத்து வந்தனர். இந்தச் சூழலில் கவினுக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. மோனிகா டேவிட் என்பவரை அவர் திருமணம் செய்துகொண்டார். 


இந்நிலையில் கவின் குறித்து பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேசுகையில், "கவினுக்கு மட்டும் ஏன் ஆன்லைனில் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். ஏன் என்று கேட்டால் அவர் பார்ப்பதற்கு அஜித் போல் இருக்கிறார். பெண்களை கவரும் முகம் இருக்கிறது. கவின் பற்றி கிசுகிசு வந்தாலும் அவரை அது பாதிக்காது. நான் நடித்த முதல் படம் சரியாக போகவில்லை என்று ஓபனாகவே ஒத்துக்கொண்டவர் அவர். யாரும் அப்படி எளிதில் ஒத்துக்கொள்ளமாட்டார்கள். 


அவர் நடித்திருந்த லிஃப்ட் படமும் நன்றாக இருந்தது. ஷூட்டிங்கின்போது இந்த சீன் ஏன் கதை என்ன என்பது குறித்து இயக்குநரிடம் அதிகம் விவாதிப்பார். கவின் ஒரு வெள்ளந்தியான மனிதர். அதனால்தான் அவருக்கு வெற்றி கிடைத்துவருகிறது. நல்ல கதையாக இருந்தால் அதை தேர்வு செய்து நடிக்கிறார் கவின். அதேபோல் தாய்மார்களை கவரும் வகையிலும் கதையில் நடிக்கிறார். அவர்தான் சின்னத்திரை அஜித். அஜித்தான் அரவிந்த் சாமியின் இடத்தை நிரப்பினார். அதேபோல் அஜித்தின் இடத்தை நிரப்புபவர்தான் கவின் என ஓபனாக பேசியுள்ளார். 

Advertisement

Advertisement