பிரபல மலையாள நடிகை மீனா கணேஷ் வயது மூப்பு மற்றும் உடல் நலக் குறைவால் இன்று காலை காலமாகியுள்ளார். இதனால் மலையாள திரையுலகம் சோகத்தில் மூழ்கியுள்ளது.
மலையாள நடிகை மீனா கணேஷ் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 81 வயதில் இறந்த இவர் முன்னர் மலையாள திரையுலகில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், அம்மா கதாபாத்திரங்களிலும் நடித்து புகழ் பெற்றிருந்தார்.
குறுகிய காலத்திலே உடல் நல குறைவால் சினிமாவை விட்டு விலகிய இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையிலே சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்துள்ளார். இவரது மறைவு, மலையாள திரைத்துறையினரையும், நாடக குழுக்களைச் சேர்ந்தவர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரின் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!