• Jun 22 2026

மமிதா பைஜூவின் பிறந்தநாளிற்கு சூர்யா கொடுத்த சூப்பரான சர்ப்ரைஸ்.. லீக்கான போட்டோ

shali / 1 hour ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றான ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் சூர்யாவின் 46-வது படமாகும்.

தயாரிப்பாளர் நாகவம்சி தயாரித்துள்ள இப்படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். மேலும், ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.


குடும்ப உணர்வுகள், உறவுகளின் வலிமை மற்றும் உணர்ச்சிபூர்வமான கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்படும் இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


இந்நிலையில், நடிகை மமிதா பைஜுவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. அந்த போஸ்டரில் மமிதா பைஜுவின் அழகிய தோற்றம் மற்றும் கதாபாத்திரத்தின் தனித்துவமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 


Advertisement

Advertisement