• Jul 14 2026

தியேட்டர்களில் ரசிகர்கள் வராததா காரணம்... அவசரமாக நெட்பிளிக்ஸ் பக்கம் ஒதுங்கிய ‘பிளாஸ்ட்’

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

நடிகர் அர்ஜுன் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் நடித்த அதிரடி திரைப்படமான ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்கிய இந்த படம் கடந்த மே 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.


முழுக்க முழுக்க ஆக்சன் கதைக்களத்தில் உருவான இந்த திரைப்படம், கராத்தே கலை தெரிந்த ஒரு குடும்பம் எதிர்பாராத சூழ்நிலைகளில் சக்திவாய்ந்த வில்லன்களை எதிர்கொண்டு போராடும் கதையை மையமாகக் கொண்டுள்ளது. விறுவிறுப்பான திரைக்கதை, அதிரடி சண்டைக் காட்சிகள் மற்றும் குடும்ப உணர்வுகளை இணைத்து உருவாக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

படத்தில் அர்ஜுனுடன் அபிராமி , ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவான இப்படம், வெளியான முதல் நாளிலிருந்தே நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று, தொடர்ந்து டிக்கெட் விற்பனையிலும் முன்னேற்றம் கண்டது. 

இதன் விளைவாக உலகளவில் ரூ.70 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்து வர்த்தக ரீதியாக வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், திரையரங்குகளில் வெற்றி கண்ட ‘பிளாஸ்ட்’ திரைப்படம் வருகிற ஜூன் 25 முதல் Netflix தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட பான் இந்திய மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. இதனால் திரையரங்குகளில் பார்க்க தவறவிட்ட ரசிகர்கள் வீட்டிலிருந்தபடியே இந்த அதிரடி படத்தை ரசிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Advertisement

Advertisement