• Jun 02 2024

யாரும் அணிந்திடாத உடையில் பிறந்தநாள் கொண்டாடிய லக்ஷ்மி ராய்-தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தமது கடின உழைப்பினால் தமக்கென்று ஓர் இடத்தைப் பிடித்த முன்னணி நடிகைகள் பலர் இருக்கின்றனர். இவர்களில் தாம் நடித்த சில திரைப்படங்களின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த நடிகையாக வலம் வந்தவர் தான் லக்ஷ்மி ராய்.

இவர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். தமிழில் ‘கற்க கசடற’ படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமான ராய்லட்சுமி, ஜெயம் ரவியின் ‘தாம் தூம்’ படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.

எனினும் அதன்பிறகு கற்க கசடற, குண்டக்க மண்டக்க,தர்மபுரி, வெள்ளித்திரை,மங்காத்தா,காஞ்சனா,அரண்மனை போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றார்.

படவாய்ப்பு குறைந்ததை அடுத்து இந்தி சினிமாவுக்கு தாவினார். இந்தியில் ராய் லட்சுமி முதன்முதலில் நடித்த ‘ஜூலி 2’ திரைப்படம் தோல்வியை சந்தித்திருந்தது.

மேலும் இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் சிண்ட்ரெல்லா திரைப்படம் வெளியானது. அவ்வப்போது பல போட்டோஷூட்டுகளை எடுத்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது புகைப்படங்களை பதிவிட்ட வண்ணம் இருப்பார்.இவ்வாறு இருக்கையில் தனது பிறந்தநாள் புகைப்படத்தை இன்ஸ்ராவில் பதிவிட்டுள்ளார்.அந்த புகைப்படம் ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.அத்தோடு அவர் தனது பிறந்தநாளில் அணிந்திருந்த உடை ரசிகர்களிடத்தே பேசு பொருளாக அமைந்துள்ளது.

https://www.youtube.com/embed/NrGhWG5Emwc

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement