• Jun 12 2026

ரோகிணியின் குழந்தையை வீட்டுக்கு அழைத்து வரும் முத்து... திடீர் திருப்பத்தில் சிறகடிக்க ஆசை

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில்  அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. குறித்த ப்ரோமோவில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

இன்றைய எபிசோட்டில், மீனாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக முத்து அவரை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்கிறார். நாளை அதே ஹாஸ்பிடலுக்கு ரோகிணி விழுந்தடித்து  செல்வதாக காட்டப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது வெளியான ப்ரோமோவின் படி, முத்துவும் மீனாவும் வரும்போது க்ரிஷ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை பார்த்து பதறுகிறார்கள். இதனால் இன்னும் இரண்டு நாள் கழித்து க்ரிஷின் கண்ணுக்கு கட்டிய கட்டை அவிழ்க்க மீண்டும் ஹாஸ்பிடலுக்கு வரவேண்டும் என்று க்ரிஷின்  பாட்டி சொல்ல, முத்து அவர்கள் இருவரையும் வீட்டுக்கு அழைத்து வருகின்றார்கள்.


இதை பார்த்து ரோகினி அதிர்ச்சியில் நிற்க, மீனா க்ரிஷ் இன்னும் இரண்டு நாட்கள் கழித்து ஹாஸ்பிடலுக்கு செல்ல வேண்டும் அதனால் இங்கே கூட்டி வந்தேன் என்று சொல்ல, இது என்ன ஹோட்டலா? இல்லை ஹாஸ்பிடல் வார்ட்டா? இங்க எங்க ரூம் இருக்கு என்று விஜயா கண்டபடி திட்டுகிறார்.

அந்த நேரத்தில் ரோகிணி எனது ரூமில் அவர்கள் இருக்கட்டும் என்று சொல்லுகிறார். அதன்பின்பு விஜயா ரோகிணியிடமே வந்து அவர்கள் இரண்டு பேரும் இங்கு இருக்கக் கூடாது அதுக்கு நீ தான் எதாவது பண்ணனும் என்று சொல்லுகிறார்.

எனவே ரோகிணியின் வீட்டுக்கு தற்போது க்ரிஷ் வந்த நிலையில், இதன் கதைக்களம் மாறுமா இல்லை இந்த முறையும் ரோகினி தப்பித்து விடுவாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement