• Jan 18 2025

பாரில் ஆட்டம் போட்ட கமல்ஹாசன் - சிம்பு.. மணிரத்னம் முன்னிலையில் என்ன நடக்குது?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!


மணிரத்னம் முன்னிலையில் கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன் பாரில் ஆட்டம் போட்டதாக வெளியாகியிருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ’தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் கடந்த சில நாட்களாக சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் குறிப்பாக ஒரு பாடல் காட்சி படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் செய்திகள் கசிந்து உள்ளது.

இந்த பாடல் ஒரு அசத்தலான குத்துப்பாட்டு என்றும் இந்த பாடலுக்கு கமல்ஹாசன் மற்றும் சிம்பு ஆகிய இருவரும்  பாரில் ஆடும் காட்சிகளை மணிரத்னம் படமாக்கியதாகவும் தெரிகிறது. அதுமட்டுமின்றி முதன்முதலாக கமல்ஹாசன் மற்றும் சிம்பு ஆகிய இருவரும் இந்த பாடலுக்கு நடனமாட இருப்பதை அடுத்து இந்த பாடல் செம ஸ்பீடாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டு  இருப்பதாகவும் இந்த பாடல் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

கமல்ஹாசன் ஏற்கனவே ஒரு மிகப்பெரிய நடன கலைஞர் என்பதும் பல படங்களில் நடன இயக்குனராகவே பணிபுரிந்துள்ள இவர் நடனத்தில் கைதேர்ந்தவர் என்பது தெரிந்தது. அதேபோல் ஸ்பீடாக நடனம் ஆடுவதில் சிம்புவை அடித்துக் கொள்ள யாரும் இல்லை என்பதும் நடனத்தில் அவரும் சிறப்பு பயிற்சி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’தக்லைஃப்’ படத்தில் கமல்ஹாசன் மற்றும் சிம்பு ஆகிய இருவரும் ஆடும் நடனம் ஆடுவது பார்வையாளர்களுக்கு செம விருந்தாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்தகட்டமாக  கேரளாவில் படப்பிடிப்பை நடத்த மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜூன் 2-வது வாரத்தில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, நாசர், அலி ஃபைசல், பங்கஜ் திரிபாதி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, வையாபுரி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். 

Advertisement

Advertisement