பிரபல தெலுங்கு நடிகர் பாலையா சமீபத்தில் திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அஞ்சலியை விளையாட்டுக்காக தள்ளிவிட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆனது என்பதும் அதை அஞ்சலியும் காமெடியாக எடுத்துக்கொண்டு பாலையாவுடன் சிரித்து மகிழ்ந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு வரும்போது பாலையா போதையுடன் வந்ததாகவும் அதுமட்டுமின்றி அவர் அருகில் தண்ணீர் பாட்டில் மற்றும் சரக்கு பாட்டில் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருவதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
அஞ்சலி நடித்த ’கேங்ஸ் ஆப் கோதாவரி என்ற திரைப்படத்தின் ப்ரமோஷன் விழா சமீபத்தில் நடந்த போது அதில் சிறப்பு விருந்தினராக பாலையா வருகை தந்திருந்தார். அப்போது அவர் அஞ்சலியுடன் பேசிக் கொண்டிருந்த போது திடீரென அவரை தள்ளிவிட்ட காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு அவர் அடித்த ஜோக் காட்சியும், அஞ்சலி சிரித்த காட்சியும் அந்த வீடியோவில் இடம் பெற்றிருந்தது என்பதை பார்த்தோம். 
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பாலையா உட்கார்ந்திருக்கும் நாற்காலியின் அருகில் சரக்கு பாட்டில் போல் ஒரு பாட்டில் இருப்பதும் அதன் அருகில் தண்ணீர் பாட்டில் இருப்பதையும் பார்க்கும்போது ஒருவேளை பாலையா மேடையிலேயே சரக்கடித்து இருப்பாரோ? அவர் போதையில் தான் அஞ்சலியை தள்ளிவிட்டு இருப்பாரோ? என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். 
ஆனால் இது அடிப்படை ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு என்றும் அவர் அருகில் இருந்தது தண்ணீர் பாட்டில் தான் என்றும் சரக்கு இல்லை என்றும் பாலையா ரசிகர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர்.
🤦♂️🤦♂️🤦♂️
 pic.twitter.com/gbWHos6gpm
                             
                            
                            
                            
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!