• Jan 19 2025

மனைவியை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்துள்ளாரே மனுஷன்.. நயனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

நடிகை நயன்தாரா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் சமூக வலைதளத்தில் இணைந்தார் என்பதும் குறுகிய காலத்திலேயே அவருக்கு அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 8 மில்லியன் ஃபாலோயர்களும், எக்ஸ் பக்கத்தில் 3 மில்லியன் ஃபாலோயர்களும் கிடைத்துள்ளனர் என்பதும் அதில் அவ்வப்போது பதிவு செய்யும் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகும் என்பது தெரிந்தது. 

இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது எக்ஸ் பக்கம் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள புதிய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். 

ஹாங்காங்கில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் நயன்தாரா அரை டவுசர் மற்றும் ஷர்ட் அணிந்து உள்ள நிலையில் நிலையில் அவருடைய புகைப்படங்கள் வேற லெவல் என்று ரசிகர்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் நயன்தாராவை அவரது கணவர் விக்னேஷ் சிவன் ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்து உள்ளார் என்றும் மனைவியை இந்த அளவுக்கு ரசிப்பவர் உலகில் வேறு யாராவது இருப்பார்களா? என்று கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன. 

மொத்தத்தில் நடிகை நயன்தாராவின் இந்த போட்டோஷூட் புகைப்படத்தை பார்த்து ஏராளமான ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர் என்றும் நயன்தாராவை இப்படி ஒரு ஸ்டைலில், காஸ்டியூமில் நாங்கள் இதுவரை பார்த்ததே இல்லை என்றும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா தற்போது ’டெஸ்ட்’ ’மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ மற்றும் ’டியர் ஸ்டூடண்ட்ஸ்’ ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இரண்டு படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement