• Jan 19 2025

பொலிசாரிடம் வசமாக சிக்கிய நடிகை நிவேதா பெத்துராஜ்.. வைரலாகும் வீடியோ

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை நிவேதா பெத்துராஜ். இதை அடுத்து உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து பொதுவாக என் மனசு தங்கம் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும் நடித்து வந்த நிவேதா பெத்துராஜ், கடந்த ஆண்டு வெளியான வெப்  சீரிஸில் முக்கிய கேரக்டரிலும் நடித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது நடிகை நிவேதா பெத்துராஜின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் திடீரென வைரலாகி வருகின்றது.

குறித்த வீடியோவில் நடிகை நிவேதா பெத்துராஜ் பொலிஸிடம் சிக்கி வாக்குவாதம் நடப்பது போலவும், இடையில் கோவமடைந்து நிவேதா கேமராவை மறைத்துவிடுவது போலவும் காட்டப்படுகிறது.


எனினும் இது உண்மையாக நடந்த சம்பவமா? இல்லை படத்தின்  ப்ரமோஷனுக்காக நடந்த சம்பவமா என சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் இது போன்ற ப்ரமோஷன்களைத்தான் தற்போது பலரும் கையாண்டு வருகின்றார்கள்.

கஸ்டடி படத்திற்காக வெங்கட் பிரபு கைது எனக் கூறிய விஷயம் இணையத்தில் வைரலானது. ஆனால் இறுதியில் அது அந்த படத்திற்கான ப்ரமோஷன் என கூறப்பட்டது. அதேபோலத்தான் இதுவும் இருக்கலாம் என இணையவாசிகள் கூறுகின்றார்கள்.


Advertisement

Advertisement