• Jul 27 2024

'மூக்குத்தி அம்மன் 2’ பிளான் செய்யும் ஆர்ஜே பாலாஜி.. ஆனால் நயனுக்கு பதில் இந்த நடிகையா?

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

ஆர்ஜே பாலாஜி நடித்து இயக்கிய ‘மூக்குத்தி அம்மன்’ என்ற திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு வசூலிலும் சாதனை செய்தது என்பது தெரிந்தது. இந்த படத்தில் நயன்தாரா அம்மன் கேரக்டரில் நடித்திருந்த நிலையில் இந்த படம் அவருக்கும் ஒரு வெற்றி படமாக அமைந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றியை அடுத்து இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பே தகவல் வெளியான நிலையில் தற்போது இது குறித்த பணியை ஆர்ஜே பாலாஜி ஆரம்பித்து விட்டதாகவும் அவருடைய அடுத்த படம் ’மூக்குத்தி அம்மன் 2’ என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ’மூக்குத்தி அம்மன்’ படத்தின் வெற்றிக்கு நயன்தாரா ஒரு முக்கிய காரணம் என்ற நிலையில் ’மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் அவர் நயன்தாராவை நடிக்க வைக்காமல் த்ரிஷாவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.



தற்போதைய நிலையில் நயன்தாராவை விட த்ரிஷாவுக்கு தான் அதிக மார்க்கெட் இருக்கிறது என்றும் கமல், விஜய், அஜித், மோகன்லால், சிரஞ்சீவி என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருவதால் அவரை ’மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் நடிக்க வைக்க ஆர்ஜே பாலாஜி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

த்ரிஷாவுக்கும் ரொம்ப நாளாகவே அம்மன் கேரக்டரில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதால் இந்த படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொள்வார் என்றும், இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement