• Jul 05 2026

கிங் மீண்டும் வருகிறார்; RJ பாலாஜி அதிரடி பேச்சு.! யார் என்ன சொல்லிருக்காங்கனு பாருங்க

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கருப்பு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ள இந்த படம், முழுக்க முழுக்க மாஸ் மற்றும் கமர்ஷியல் அம்சங்களுடன் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. படம் வரும் மே 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சினிமா வர்த்தக வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்களின் படி, இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் வாங்கியதாகவும், சேட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து தயாரிப்பு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

‘கருப்பு’ படத்தின் முக்கிய அம்சமாக, சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா மற்றும் திரிஷா மீண்டும் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் இதற்கு முன் நடித்த படங்களை விட வித்தியாசமான தோற்றத்தில் இந்த படத்தில் காட்சியளிக்க உள்ளதாக தகவல். 


மேலும் இந்திரன்ஸ், சுப்ரீத் ரெட்டி, நட்டி, அனகா மாயா ரவி, சுவாசிகா, ஷிவதா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், கருப்பு பட இசை வெளியிட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, “இந்த படம் சூர்யா ரசிகர்களுக்கான ஒரு விருந்தாக இருக்கும். ஒவ்வொரு சில நிமிடங்களுக்கும் ஒரு உயர்ந்த தருணம் இருக்கும். ‘கிங்’ மீண்டும் வருகிறார்” என கூறினார்.

நடிகர் சூர்யா தனது உரையில், “இந்த படம் இவ்வளவு தூரம் வந்தது கருப்பசாமியின் அருளால் தான் என நம்புகிறேன். ஆர்.ஜே. பாலாஜி ஒரு பன்முகத் திறமையாளர். அவரின் திறமை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்றார்.

இசையமைப்பாளர் சாய் அபயங்கர், “ஒரு புதிய இசையமைப்பாளருக்கு வாய்ப்பு அளித்த சூர்யா அவர்களுக்கு நன்றி. இந்த படத்தின் பின்னணி இசை ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறும். ‘கருப்பு’ கண்டிப்பாக வெற்றி பெறும் படம்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement