• May 13 2024

கோவா முதல்வரைச் சந்தித்த கே.ஜி. எப் யாஷ் மற்றும் அவரது மனைவி - எங்கு சந்தித்துள்ளனர் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

கன்னட நடிகரான யாஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் கே ஜி எப் மற்றும் கேஜிஎஃப் சாப்ட்டர் 2. சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் 2 மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றியால் யாஷ் இப்போது இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் நடிகராக மாறியுள்ளார்.

கேஜிஎஃப் 2-ன் வெற்றிக்குப் பிறகு யாஷ் சமீபத்தில் கோவாவில் தனது குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாடி வருகிறார். அங்கு அவர் கேஜிஎஃப் படத்தின் வெற்றியை கொண்டாடினார். கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான இப்படம் தற்போது 1000 கோடி வசூல் செய்து திரையரங்குகளில் வசூலில் சாதனை படைத்துள்ளது.

கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான இப்படம் பல வசூல் சாதனைகளை முறியடித்துள்ளது. இந்நிலையில் நடிகர் யாஷ் மற்றும் மனைவி ராதிகா பண்டிட் புதன்கிழமை காலை கோவா முதல்வர் பிரமோத் சாவந்தை அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்தித்தார்.

கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் படங்களைப் பகிர்ந்துகொண்டு, கேஜிஎஃப் சூப்பர் ஸ்டாரான யாஷ் மற்றும் அவரது மனைவி ராதிகா மற்றும் குழுவினருடன் பனாஜியில் சந்தித்ததில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement