• Jul 27 2024

2 நாட்கள் தான் படப்பிடிப்பு.. அதற்குள் ரத்து செய்யப்பட்டதா? ‘குட் பேட் அக்லி’ படத்தின் பேட் டைம்..!

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

அஜித் நடித்து வரும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு இரண்டு நாட்களுக்கு முன் தொடங்கிய நிலையில் அதற்குள் நிறைவு பெற்றதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் கழித்து தான் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’குட் பேட் அக்லி’ படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடக்கும் என்றும் முதல் கட்ட படப்பிடிப்பு சுமார் 20 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டதாகவும் இதில் ஒரு அதிரடி ஸ்டண்ட் காட்சி மற்றும் இன்ட்ரோ பாடல் காட்சிகள் படமாக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

ஆனால் படப்பிடிப்பு நடந்த இரண்டே நாட்களில் இந்த படப்பிடிப்பை இயக்குனர் முடித்துக் கொண்டதாகவும் அடுத்த கட்ட படப்பை சில நாட்கள் கழித்து தொடங்கும் என்றும் கூறப்படுகிறது

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மே 13ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த படத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தேர்தலில் வாக்கு செலுத்த வெவ்வேறு ஊர்களுக்கு செல்ல வேண்டி இருப்பதால் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த வேண்டாம் என்று முடிவு செய்ததாகவும் தேர்தல் முடிந்த பிறகு அதன் பின்னர் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் மே 16 அல்லது 17 ஆம் தேதி படப்பிடிப்பு நடக்கும் என்றும், அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அதன் பின்னர் தொடர்ச்சியாக 15 முதல் 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. 

Advertisement

Advertisement