நடிகை அமலாபால் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் அவருக்கு குழந்தை பிறந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் அவர் தனது கணவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தில் அவர் தனது கணவருக்கு முத்தம் கொடுக்கும் காட்சி உள்ளது. இதற்கு ஏராளமான கமெண்ட்கள் பதிவாகி வருகிறது. 
தமிழ், மலையாளம், தெலுங்கு திரையுலகில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முன்னணி நடிகையாக இருந்தவர் அமலாபால் என்பதும் குறிப்பாக அஜித், விஜய் ஆகிய இருவருடன் இணைந்து நடித்துள்ளார் என்பதும் தெரிந்தது. 
இந்த நிலையில் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து அதன் பின்னர் விவாகரத்து செய்த அமலாபால், தேசாய் என்பவரை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பதும் திருமணம் ஆன சில மாதங்களில் அவர் கர்ப்பமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
இந்த நிலையில் கர்ப்பிணியாக இருக்கும்போது கூட அவர் ’ஆடு ஜீவிதம்’  என்ற படத்தின் ப்ரமோஷன் பணிக்கு சென்றார் என்பதும் அது மட்டும் இன்றி கர்ப்பிணியாக இருக்கும் பல புகைப்படங்கள் மற்றும்  நடனம் ஆடுவது, நீச்சல் குளத்தில் குளிப்பது உட்பட பல புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்த நிலையில் தற்போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் சற்று முன் அவர் தனது கணவருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் அவர் நடித்த ’லெவல் கிராஸ்’ என்ற திரைப்படத்தின் ஆடியோ விழா வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
                             
                            
                            
                            
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!