• Jan 19 2025

மணிரத்னம், ஷங்கரை மிஞ்சிவிட்ட இயக்குனரின் சம்பளம்.. ஒரு வெப்தொடர் இயக்க ரூ.70 கோடி?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்கள் பட்டியலில் மணிரத்னம், ஷங்கர் இருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த பட்டியலில் அட்லி இணைந்தார் என்றும் அவர் இயக்க இருக்கும் அடுத்த படத்திற்கு 50 கோடி ரூபாய் சம்பளம் என்றும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி என்பவருக்கு ஒரு வெப் தொடரை இயக்க 70 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

’ஹீரமண்டி’ என்ற வெப் தொடரை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி உள்ள நிலையில் இந்த தொடரை இயக்குவதற்கு தான் அவருக்கு 70 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த தொடரில் சோனாக்‌ஷி சின்ஹா, மனிஷா கொய்ராலா, ரிச்சா சத்தா, அதிதிராவ் ஹைத்ரி ஆகிய 4 முன்னணி நடிகைகள் நடித்துள்ளனர். இந்த நான்கு நடிகர்களுக்குமே இரண்டு கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வெப் தொடரின் மொத்த பட்ஜெட் 100 கோடி ரூபாய் என்று தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் ஓடிடி தளத்திற்காக இந்த வெப் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு பெண்களின் நிலை பற்றிய கதைய அம்சம் கொண்ட இந்த வெப் தொடர் ஆடம்பரமான செட் அமைத்து உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இந்த தொடரில் நடிக்கும் நடிகைகள் அணியும் நகைகள் ஒரிஜினல் தங்க நகைகள் என்றும் அதனால் இந்த  தொடருக்கு அதிக செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement