• Jan 19 2025

குடும்ப சீரியல் போரடிச்சிருச்சா? சன் டிவியில் ஒரு ஹாரர் திகில் சீரியல்.. நேரம் அறிவிப்பு..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

சன் டிவி, விஜய் டிவி உட்பட கிட்டத்தட்ட அனைத்து டிவிகளிலும் ஒளிபரப்பாகும் சீரியல்கள் குடும்பத்தை மையமாக வைத்து உருவாகும் என்பதும் ஒரு குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள், அந்த பிரச்சனைகள் எப்படி நீண்டு கொண்டே செல்லும், கடைசியில் அந்த பிரச்சினைகளை எப்படி முடிப்பது என்பதுதான் கிட்டத்தட்ட அனைத்து சீரியல்களும் இருக்கும், அதில் சில காதல், செண்டிமெண்ட் ஆகியவை கலந்து இருப்பது தான் தமிழ் சீரியலின் பார்முலாவாக உள்ளது. 

இந்த நிலையில் தொடர்ச்சியாக குடும்ப சீரியல்களை பார்த்து போரடித்த பார்வையாளர்களுக்காக சன் டிவி தற்போது ஒரு புதிய ஹாரர் திகில் சீரியலை அறிமுகம் செய்ய உள்ளது.  கடந்த சில மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட இந்த சீரியல் தற்போது தான் ஒளிபரப்பாக உள்ளது என்றும் இந்த சீரியலின் டைட்டில் ’அனாமிகா’ என்பதும் குறிப்பிடத்தக்கது.

தர்ஷன், ஆகாஷ், அட்சதா உள்பட பலர் நடித்துள்ள இந்த சீரியல் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்த்த நிலையில் ஞாயிறு மட்டுமே ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது..

ஏற்கனவே அடுத்த வாரம் முதல் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் பகல் 12.30 டாப் குக்கு டூப் குக்கு என்ற சமையல் நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில் அந்த நிகழ்ச்சி முடிந்ததும் இரண்டு மணிக்கு ’அனாமிகா’ திகில் சீரியல் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது.

பொதுவாக திகில் சீரியலை இரவில் பார்த்தால் பார்வையாளர்களுக்கு திகிலாக இருக்கும் நிலையில் மதிய நேரத்தில் ஒளிபரப்பாக ஒளிபரப்பாவதால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த சீரியல் நன்றாக சென்றால் இரவு நேரத்திற்கு மாற்ற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement