• Jan 19 2025

நடிகர் சூர்யா வெளியிட்ட 'ஹிட்லிஸ்ட்' பட பாடல் படு வைரல்... ஹீரோ யாரு தெரியுமா?

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

நடிகரும் இயக்குனருமான கே.எஸ் ரவிக்குமாரின் படைப்பாக உருவான படம் தான் 'ஹிட்லிஸ்ட்'.  இந்த படத்தை ஆர்.கே.செல்லுலாய்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த நிறுவனம் சார்பில் கமலஹாசன் நடித்த தெனாலி மற்றும் கூகுள் குட்டப்பா ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார், இயக்குனர் விக்ரமனிடம்  உதவியாளராக பணியாற்றிய அன்பிற்காக இந்த படத்தை தயாரித்ததாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விக்ரமின் மகன் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.


இந்த படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கே.எஸ் ரவிக்குமார், கௌதம் வாசுதேவ மேனன், முத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட், ஐஸ்வர்யா தத்தா, அபிநயா, முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. 


இந்த நிலையில், இந்த படத்தின் 'ஐ ஆம் தி டேஞ்ஜர்' என்ற பாடலை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். இந்த படம் நகைச்சுவை காதலோடு அதிரடி காட்சிகள் என அனைத்தையும் மக்களை கவரும் வகையில் இருக்கும் என ரசிகர்களை எதிர்பார்க்கின்றார்கள்.


இதேவேளை, நடிகர் சூர்யா இயக்குனர் விக்ரமின் இயக்கத்தில் உன்னை நினைத்து படத்திலும், இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார்  இயக்கத்தில் ஆதவன் படத்திலும் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement