• Mar 12 2026

கீர்த்தி சுரேஷ் ஜோடிக்கு குழந்தை பொறக்கப் போகுது! சந்தோசத்தில் ஹீரோ! முத்தமிட்டு அறிவிப்பை வெளியிட்ட அட்லீ பட நடிகர்!

shali / 2 years ago

Advertisement

Listen News!

தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். அட்லீ தயாரிப்பில் பாலிவுட்டில் அந்த படத்தில் விஜய்க்கு பதிலாக பாலிவுட்டில் ஹீரோவாக வருண் தவான் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகர் வருண் தவான் மனைவி கர்ப்பமாக உள்ள செய்தியை மனைவியின் கர்ப்ப வயிற்றுக்கு முத்தம் கொடுத்து அறிவித்துள்ளார்.


36 வயதாகும் வருண் தவான் பேபி ஜான் எனும் டைட்டிலில் உருவாகி வரும் தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்து வரும் நிலையில், உண்மையிலேயே அவருக்கு பேபி பொறக்கப் போகிறது. கடந்த 2021ம் ஆண்டு தான் நடாஷா தலால் என்பவரை கோலாகலமாக திருமணம் செய்துக் கொண்டார்.


நடிகைகளே 40 வயதானாலும் பாலிவுட்டில் திருமணம் செய்துக் கொள்ளாமல் நடித்து வரும் நிலையில், 33 வயதிலேயே அழகாக திருமணம் செய்துக் கொண்டு குடும்ப வாழ்க்கையையும் சினிமா வாழ்க்கையையும் நடத்தி வருகிறார். ஹீரோக்கள் திருமணம் ஆனால், பிரச்சனை இல்லை. ஆனால், ஹீரோயின்கள் திருமணம் ஆனால், மார்க்கெட் போய் விடும் என்கிற எண்ணம் இன்னமும் பலருக்கு உள்ளது.


திரிஷா, சாய் பல்லவி, கீர்த்தி சுரேஷ் எல்லாம் அதனால் தான் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. வருண் தவான் தனது மனைவியின் வயிற்றில் வளரும் தனது வாரிசுக்கு முத்தம் கொடுத்து “நாங்கள் கர்ப்பமாகிட்டோம்” என பதிவிட்டு இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Advertisement

Advertisement