• May 20 2024

உதட்டழகிற்காக அறுவை சிகிச்சை செய்த கீர்த்தி சுரேஷ்? தீயாய் பரவும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

திரைப்படத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் ,தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து பட்டையை கிளப்பி வருகின்றார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவர் 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமான இவர் டாப் நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் பிஸியான நடிகையாகவும் உள்ளார்.

இவ்வாறுஇருக்கையில் தமிழில் சமீபத்தில் அவரது நடிப்பில் சாணிக் காயிதம் படம் வெளியானது. அமேஸான் பிரைம்மில் வெளியாகியுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பு பெரும் பாராட்டை பெற்றுள்ளது. இதேபோல் தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் சர்க்காரு வாரி பாட்டா படத்தில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

மேலும் இந்தப் படம் ரிலீஸ் ஆன நான்கே நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது. எனினும் இந்தப் படத்தில் மகேஷ் பாபு மற்றும் கீர்த்தி சுரேஷின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் படத்தை பார்த்த ரசிகர்கள் தற்போது கீர்த்தி சுரேஷின் லுக் மாறியுள்ளதாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எனினும் தற்போது வெளியாகி வரும் புகைப்படங்களளில் கீர்த்தி சுரேஷ் வித்தியாசமாக இருப்பதால் உதட்டை பெரிதாக்க அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக ரசிகர்கள் யூகித்து வருகின்றனர். கீர்த்தியின் தோற்றம் அவரது முந்தைய அவதாரத்திலிருந்து சற்று வித்தியாசமாகி இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் கீர்த்தி சுரேஷ் உதடு அறுவை சிகிச்சை செய்திருக்கலாமென தகவல் பரவி வருகிறது.

ஆனால் கீர்த்தி சுரேஷ் இது குறித்து எதுவும் கூறவில்லை. நடிகைகள் அழகு சிகிச்சை செய்துகொள்வது இது முதல் முறையல்ல. எனினும் இதற்கு முன்பு காஜல் அகர்வால் உதடு மற்றும் மூக்கு மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார். ஸ்ருதி ஹாசன், அதிதி ராவ் ஹைதாரி ஆகியோரும் இதற்கு முன்பு அழகுக்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement