• May 09 2024

முன்னணி நடிகர்களை வைத்து அனிருத் தொகுத்து வழங்க போகும் நிகழ்ச்சி..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

அனிருத் தனுஷின் 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே கொலவெறி என்ற பாடலை உருவாக்கி உலகம் முழுவதும் பிரபலமானார் அனிருத்.அதைத்தொடர்ந்து எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, மான் கராத்தே என இவர் இசையமைத்த அனைத்து படங்களின் பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்தது

எனினும் இதைத்தொடர்ந்து இவருக்கு விஜய்யின் கத்தி, அஜித்தின் வேதாளம் என அடுத்தகட்ட ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் அனிருத் முன்னணி இசையமைப்பாளரானார்.

தற்போது ஒரே சமயத்தில் ரஜினி, கமல், விஜய், அஜித் என உச்ச நட்சத்திரங்களின் படத்திற்கு தற்போது இசையமைத்துள்ளார்

மாதத்திற்கு ஒரு முறை இவரின் திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. இவர் தொட்ட படங்கள் எல்லாம் ஹிட்டாகி வரும் .

இவ்வாறுஇருக்கையில் அனிருத் தற்போது புதிதாக தொகுப்பாளர் அவதாரம் எடுக்க போகிறாராம். ஆம், புதிதாக வந்துள்ள aha-OTT வழங்கும் ஒரு நிகழ்ச்சிக்கு அனிருத் தொகுப்பாளராக இருக்கிறார்.

அதில் அவர் முன்னணி நடிகர்களுடன் நேர்காணலில் ஈடுபடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement

Advertisement