• Sep 08 2024

சூர்யா-ஜோதிகா நடித்த படத்தின் இரண்டாம் பாகத்தில் கவின் நடிக்கிறாரா? ஆச்சரிய தகவல்..!

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!

சூர்யா ஜோதிகா நடித்த திரைப்படம் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாகவும் அதில் சூர்யா நடித்த கேரக்டரில் கவின் நடிக்க இருப்பதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் கவின் நடித்த ’ஸ்டார்’ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அவர் தற்போது வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகி வரும் ’மாஸ்க்’ நெல்சன் தயாரிப்பில் உருவாகி வரும் ’ப்ளடி பெக்கர்’ நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கிஸ்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் ’சில்லுன்னு ஒரு காதல்’ படத்தின் இயக்குனர் கிருஷ்ணா என்பவர் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக ஒரு படத்தை இயக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும் இதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த படம் ’சில்லுன்னு ஒரு காதல்’ படத்தின் இரண்டாம் பாகம் என்றும் சூர்யா, ஜோதிகா பூமிகா நடிப்பில் ஏஆர் ரகுமான் இசையில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் நல்ல வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தான் கிருஷ்ணா இயக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சூர்யா நடித்த கேரக்டரில் கவின் நடிக்க இருப்பதாகவும், ஜோதிகா நடித்த கேரக்டரில் இவானா நடிக்க இருப்பதாகவும், பூமிகா நடித்த கேரக்டரில் அவரே நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement