• Jan 19 2025

தமிழ் சினிமா திருந்தாது.. ‘பிடி சார்’ படத்திற்கெல்லாம் சக்சஸ் மீட்? புளூ சட்டை மாறன் கிண்டல்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!


சமீபத்தில் வெளியான ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த ’பிடி சார்’ கலவையான விமர்சனங்களை பெற்று சுமாராகவே ஓடி வருகிறது. மேலும் இந்த படத்தின் பட்ஜெட் தொகை கூட இன்னும் வசூல் ஆகவில்லை என்று கூறப்படும் நிலையில் அதற்குள் இந்த படத்தின் சக்சஸ் மீட் படக்குழுவினரால் கொண்டாடப்பட்டது கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகியுள்ளது.

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் தோல்வி அடைந்த படங்களுக்கெல்லாம் போலியாக சக்சஸ் மீட் கொண்டாடி வருகின்றனர் என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே பல திரைப்படங்கள் போலி சக்சஸ் மீட் கொண்டாடப்பட்ட நிலையில் தற்போது ’பிடி சார்’ படத்தின் சக்சஸ் கொண்டாடப்பட்டுள்ளதை புளூ சட்டை மாறன் கிண்டல் அடித்துள்ளார்.

ஏற்கனவே தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் ஒன்று கூட இல்லை என்று புளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் கூறிய நிலையில் தற்போது 'பிடி சார்’ படத்துக்கு கொண்டாடியது அவர் கிண்டல் செய்துள்ளார்.

புளூ சட்டை மாறனின் இந்த பதிவுக்கு ’தமிழ் சினிமா திருந்தாது’ என்பது உட்பட பல கமெண்ட்களை ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர். தியேட்டரில் இருந்து பெரும்பாலும் தூக்கப்பட்டு விட்ட ’பிடி சார்’ படத்தை சக்சஸ் என கொண்டாடுவதா என சினிமா ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement