• Jan 19 2025

ராகினிக்கு தாலி கட்ட போகும் நிவின்... பசுபதியிடம் சிக்கி தவிக்கும் காவேரி... காவேரியை தேடி அலையும் விஜய்... இனி நிகழ போவது என்ன?

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலின் இன்றைய நாள் என்ன நடக்க போகிறது என பார்ப்போம் வாங்க.  


பசுபதி நிவினை ராகினி கழுத்தில் தாலி கட்டுமாறு காவேரியை வைத்து மிரட்டுகிறார். அப்போது நிவின் அருகில் இருப்பவர் கையில் உள்ள கத்தியை எடுத்து ராகினி கழுத்தில் வைத்து காவேரியை விடுமாறு மிரட்டுகிறார். சுதாரித்துக்கொண்ட ராகினி நிவினின் கையை கடித்து விடுகிறார்.


அப்போது கத்தி தவறுதலாக கீழே விழவும் மறுபடியும் அடியாட்கள் நிவினை பிடித்து அமர வைத்து தாலி கட்ட சொல்கின்றனர். தாலி கட்டுவதற்கு கொண்டு செல்லும் போது  மறுபக்கம் பசுபதி இருக்கும் இடத்துக்கே விஜய் சென்று விடுகிறார். ஒரு கட்டையால் அடித்து பசுபதி கையில் உள்ள கத்தியை கீழே தட்டி விடுகிறார் பிறகு அனைத்து அடியாட்களையும் அடித்து போட்டு விட்டு காவேரியை காப்பாற்றி விடுகிறார்.


பிறகு போனை எடுத்து நிவினிடம் கல்யாணம் ஏதும்  நடக்க இல்லையே ஒரு 11 மதம் பொறு டா என்று கூறுகிறார். அந்த பக்கம் நிவின் கட்ட போன தாலியை எடுத்து கையில் வைத்து நக்கலாக ரோகிணி முன் ஆட்டி கொண்டு இருக்கிறார்.     

Advertisement

Advertisement