• Jan 18 2025

தங்க மீனாக மாறிய காவாலயா கண்ணம்மா... இளசுகளை கவர்ச்சியில் தெறிக்கவிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் பிஸியான நடிகையாக இருப்பவர் தான் தமன்னா. இவர் கேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினார் தொடர்ந்து  விஜய், ஜெயம் ரவி, கார்த்தி, என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

குறிப்பாக தெலுங்கில், இவர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்த பாகுபலி படம், தமன்னாவை உலக அளவில் கவனிக்க வைத்தது. பாகுபலி படத்திற்கு பின்னர், தெலுங்கு திரையுலகிலும், ஹிந்தியிலும் பிசியாக மாறியுள்ளார்.


அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதிலும் குறிப்பாக இவர் ஆடிய 'காவாலயா' என்ற பாடல் இவருக்கு பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இவ்வாறாக நடிப்பில் பிசியாக இருந்துவரும் தமன்னா சமூக வலைத்தளங்களிலும் எப்போதுமே ஆக்டிவாக காணப்படுவார்.


இவர் சமீபத்தில் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக கூறப்பட்டது. அதன்பின் அவருடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருந்தார்.


இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் பல கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகின்றன.

அதாவது, பிரபலமான ஆடைவடிவமைப்பு நிறுவனம் "IDIVA" இன் ஆடைகளை விளம்பரப்படுத்தும் விதமாக பல கவர்ச்சி அடைக்களை அணிந்து அதை புகைப்படமாக எடுத்து வெளியிட்டுள்ளார். பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கும் அவ் ஆடைகள் தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement